அதிமுகவில் இருந்து நவநீதகிருஷ்ணன் நீக்கம் - கனிமொழியை பாராட்டியதால் நடவடிக்கை

AIADMK From அதிமுக Fired A. Navaneethakrishnan
3 மாதங்கள் முன்

மாநிலங்களவை உறுப்பினரான நவநீதகிருஷ்ணன் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

டி.கே.எஸ் இளங்கோவன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட நவநீத கிருஷ்ணன் மாநிலங்களவைக்கு புதிதாக சென்ற போது பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்ததாகவும்,அப்போது டி.கே.ரங்கராஜன்,கனிமொழி ஆகியோர் பல விஷயங்களை கற்றுக்கொடுத்ததாக கூறினார்.

ஒரு முறை மத்திய அமைச்சருடன் சண்டை போட்டதாகவும்,அப்போது கனிமொழி தன்னை சமாதானப்படுத்தியதாகவும் கூறினார்.

அவரே அமைச்சருடன் பேசி தமிழகத்தை பொறுத்தவரை பாதிக்க கூடிய விஷயம் எனவும் அமைச்சருக்கு எடுத்துரைத்தார் என பேசினார்.

இதையடுத்து கனிமொழி நம்மூர் மாதிரி பேசக்கூடாது எனவும் எரிச்சலுாட்டாமல் அழுத்தம் தர வேண்டும் எனவும் அறிவுறுத்தியதாக கனிமொழியை பாராட்டி பேசி இருந்தார்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் நவநீத கிருஷ்ணன் எம்.பி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.