மீனாட்சி உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவன தலைவர் A.N.இராதாகிருஷ்ணன் உயிரிழந்தார்..!
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் A.N.இராதாகிருஷ்ணன் உயிரிழந்தார்.
A.N.இராதாகிருஷ்ணன் உயிரிழந்தார்
தமிழகத்தில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றாக மீனாட்சி கல்வி நிறுவனம் விளங்குகிறது.
இந்நிலையில், மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் (MAHER) வேந்தர் மற்றும் ஸ்ரீ முத்துக்குமரன் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான A.N.இராதாகிருஷ்ணன் மூப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நிர்வாகத்தினர், ஊழியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, நேற்று அவரது உடல் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
A.N.இராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை மூலம் பல உதவிகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.