நேரம் வரட்டும் என நோட்டம்... பெண்ணை சாலையில் தள்ளி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையன்
சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கச் சங்கிலி பறிப்பு
காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோவில் தெற்கு மாட வீதி பகுதியை சேர்ந்தவர் குணசுந்தரி(60). பேரனின் முதலாவது பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக இன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்க்கு சென்று கொண்டிருந்தார்.
இவரை வீட்டிலிருந்தே இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ஒரு மர்ம நபர் குணசுந்தரி யின் கழுத்தில் இருந்த சுமார் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு தங்க சங்கிலியை அறுத்து கொண்டு தப்பித்தார்.
செயின் பறிப்பின் போது குணசுந்தரி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிசிடிவி காட்சிகள் வெளியீடு
தகவல் அறிந்து வந்த தாலுகா காவல்துறையினர் அருகே உள்ள சிசிடிவி காட்சியை கைப்பற்றி மர்ம நபரை தேடி வருகின்றனர்.
பட்ட பகலில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் குணசுந்தரியிடம் செயின் பறிக்கும் காட்சியும், மூதாட்டி கீழே விழுந்து காயம் அடைந்ததும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த சிசிடிவி காட்சி வைரல் ஆகி காஞ்சிபுரம் நகரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.