மருத்துவமனைக்கு வர மறுத்த மகள் - தலையில் கல்லை போட்டு கொன்ற அம்மா..!

Tamil Nadu Police Tiruchirappalli Death
By Thahir Jul 31, 2023 06:47 AM GMT
Report

திருச்சி அருகே மருத்துவமனைக்கு வர மறுத்த மகளின் தலையில் கல்லைப்போட்டு அவரது தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன நிலை பாதிக்கப்பட்ட மகள் 

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம், அலகரை ஊராட்சிக்கு உட்பட்ட அரியனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ் இவருக்கு வயது 43.

இவர் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா வயது 35. இவர் ஊர்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு ஹேமேஷ் என்ற 8 வயதில் மகன் ஒருவன் உள்ளார்.

இந்த நிலையில் மஞ்சுளாவிற்கு சிறிது மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் ஊர்க்காவல் படை பணிக்கு செல்லாமல் இருந்தார்.

லால்குடி அருகே தாளக்குடியில் உள்ள அவரது தாய் அன்னக்கிளி வீட்டில் கடந்த ஒரு மாதமாக அவர் தங்கியிருந்து திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த வியாழக்கிழமை மஞ்சுளா தனது தாய் வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க அரியனாம்பேட்டைக்கு வந்துள்ளார்.

A mother killed her daughter

தாயுடன் தகராறு 

இதையடுத்து மஞ்சுளாவை தேடிக்கொண்டு அவரது தாய் அன்னக்கிளி அங்கு வந்துள்ளார். பின்னர் மஞ்சுளாவை மீண்டும் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வருமாறு அன்னக்கிளி நேற்று முன்தினம் அழைத்துள்ளார்.

மஞ்சுளா சிகிச்சைக்கு வர மறுத்து தனது தாய் மற்றும் மாமியார், மாமனாருடன் தகராறு செய்து சிகிச்சைக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தாய்க்கும் மகளுக்கும் அன்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் துாங்கியுள்ளனர்.

தலையில் கல்லை போட்டு கொலை 

பின்னர் நேற்று காலை எழுந்த அன்னக்கிளி தனது மகள் மஞ்சுளாவின் தாலையில் கல்லை போட்டுள்ளார்.

இதில் தலை சிதைந்து ரத்த வெள்ளத்தில் மஞ்சுளா துடிதுடித்து இறந்தார். இதைத் தொடர்ந்து அன்னக்கிளி தொட்டியம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின், தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையன் சென்று உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அன்னக்கிளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.