அந்தரங்கத்தில் தொங்கிய படி செல்லும் ரயில் - பயணிக்க ஆர்வம் காட்டும் மக்கள்
ஜெர்மனியில் தொங்கிய படி செல்லும் ரயிலில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் நகரம்
ஜெர்மனியின் வடக்கு ரைன் - வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள வுப்பர்டல் என்ற அழகிய நகரம் ஒன்று உள்ளது.
இயற்கை எழில் நிறைந்த வுப்பர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த நகரம் அதன் தொழில்துறை பாரம்பரியம், புதுமையான போக்குவரத்து அமைப்பு மற்றும் கலாச்சார ஈர்ப்புகளுக்கு பெயர் பெற்றது.
இந்த நகரத்தில் போக்குவரத்துக்கென தடங்கள் அமைக்க வேண்டி வந்த போது மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் குறைந்த இடவசதி தனியார் நிலங்களைக் கைவசப் படுத்துதல், கட்டடங்களை இடித்துக் கட்டுதல் போன்ற பல போக்குவரத்துச் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதை தவிர்க்கும் விதமாக மோனோரயில் அமைப்பு கொண்டு வரப்பட்டது. இது ஒரு தொங்கும் ரயில் அமைப்பாகும்.

மோனோ ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டும் மக்கள்
இந்த புதுமையான வடிவமைப்பு தெருக்கள் மற்றும் ஆற்றின் மேலே நிர்ணயம் செய்யப்பட்டதால் நகராட்சி உள்கட்டமைப்புக்கு எந்த விதமான இடையூறும் இன்றி அமைந்தது. இந்த ரயில் நிறுவனம் கடந்த 1901ல் திறக்கப்பட்டது.
இது வுப்பர் ஆற்றின் மேலாகவும் மற்றும் நகரத்தின் வழியாக சுமார் 13.3 கிலோ மீட்டர்கள் துாரம் வரை நீண்டுள்ளது.

பெரிய எஃகு துாண்களால் கட்டப்பட்ட தண்டவாளங்களுக்கு கீழே இந்த ரயில்கள் பற்சக்கரங்களால் பற்றிக் கொண்டு தலைகீழாக தொங்கிய வண்ணம் செல்கின்றன.
இதன் ஊடு பாதையில் பல நிறுத்தங்களும் உண்டு. புதுமையான பொறியியலுக்கு கண்கவர் உதாரணமான இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகளையும், பார்வையாளர்களையும் ஈர்த்து வருகிறது.