குடியரசுத் தலைவர் தேர்தல்.. ரூ.4,809கோடி கடன் கோட்ட நபர்-ரிசர்வ் வங்கி அதிருப்தி!
இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டி சேர்ந்த ரமேஷ் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடன் வேண்டும்
சமூக ஆர்வலரும் காந்தியவாதியான இவர் சமூக பிரச்சினைகளுக்கு வித்தியாசமான முறையில் மனு அளிப்பது என செயல்பட்டு வருகிறார். சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல் என நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து களம் இறங்கி வருகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டவர். அதற்காக வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ 50 கோடி வரை கடன் வேண்டும் என நாமக்கல் ஸ்டேட் பேங்கில் மனு கொடுத்து அந்த வங்கி மேலாளரை அதிர வைத்தவர்.
ரிசர்வ் வங்கி
தற்போது குடியரசுத் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்துள்ளார். ரமேஷ் அதற்காக வாக்காளர்களுக்கு ரூ 4,809 கோடி கடன் வேண்டும் என்று இந்த முறை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியின் கதவை தட்டியுள்ளார்.
சென்னை இராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியில் அவர் மனு அளித்துள்ளார். அதில், “நான் குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.
தள்ளுபடி
அரசுத் தலைவராக நான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநில யூனியன் பிரதேசங்களில் உள்ள உறுப்பினர்கள் என குறைந்தபட்சம் 2,405 வாக்குகள் தேவைப்படுகிறது.
அதிகபட்சம் ஒரு நபருக்கு ரூ.100 கோடி வீதம் அன்பளிப்பு வழங்க வேண்டும்.bபிரதமர், முதலமைச்சர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 4,809 கோடியை சென்னை ரிசர்வ் வங்கி மானிய கடனாக அல்லது
தள்ளுபடி கடனாக வழங்க வேண்டும்” என அந்த மனுவில் கூறியுள்ளார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா - வைரலாகும் புகைப்படம்