அச்சு அசலாக தல அஜித் போல் மாறிய இளைஞர் - ரசிகர்கள் அதிர்ச்சி!!

fans enjoy man put makeup look like ajith
By Anupriyamkumaresan Aug 11, 2021 10:04 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

தமிழ் திரையுலகில் நல்ல நடிகர் என்று மட்டுமல்லாமல், நல்ல மனிதர் என்றும் பேரெடுத்தவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் படம் உருவாகி வருகிறது.

அச்சு அசலாக தல அஜித் போல் மாறிய இளைஞர் - ரசிகர்கள் அதிர்ச்சி!! | A Man Put Makeup Look Like Actor Ajith Fans Enjoy

எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட வலிமை படத்தின் First லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் டிரெண்ட் ஆனது.

அச்சு அசலாக தல அஜித் போல் மாறிய இளைஞர் - ரசிகர்கள் அதிர்ச்சி!! | A Man Put Makeup Look Like Actor Ajith Fans Enjoy

அதேபோல் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான, ' நாங்க வேற மாரி ' பாடலும் இந்தியளவில் பல சாதனை இதுவரை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர், அச்சு அசல் அஜித்தை போலவே மேக்கப் போட்டுகொண்டு வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது தல அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.