நள்ளிரவில் கிணற்றிலிருந்து கேட்ட மர்ம சத்தம்.. பதறி ஓடிய கிராம மக்கள் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

Myanmar China Borewell World
By Vidhya Senthil Dec 09, 2024 07:32 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 3 நாட்களாகக் கிணற்றிலிருந்து மர்ம சத்தம் கேட்டதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

 மர்ம சத்தம்

தாய்லாந்து - மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தில் இருக்கும் கிணற்றில் 3 நாட்களாக விசித்திரமான சத்தம் வந்துள்ளது. இதனைக் கேட்ட அந்த கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது பேயின் குரல் என்று நம்பி அந்த கிணற்றுக்கு அருகில் செல்லாமல் இருந்துள்ளனர்.

கிணற்றிலிருந்து கேட்ட மர்ம சத்தம்..

தொடர்ந்து அந்த சத்தம் வந்து கொண்டிருந்தால் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த கிணற்றை ஆய்வு செய்தனர். அப்போது காவலருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் இருட்டில் மறைந்த கிராமம்- இன்றுவரை நள்ளிரவில் நடக்கும் அமானுஷ்யம்!

பல நூற்றாண்டுகளுக்கு முன் இருட்டில் மறைந்த கிராமம்- இன்றுவரை நள்ளிரவில் நடக்கும் அமானுஷ்யம்!

12 மீட்டர் ஆழமுள்ள கிணற்றுக்குள் 22 வயதான லியு சுவானி என்ற இளைஞர் தவறி விழுந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை மீட்ட காவல்துறையினர் 3 நாட்களாக இரவும் பகலும் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து பலவீனமான நிலையில் லியு சுவானி காணப்பட்டார்.

இளைஞர்

மேலும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். மேலும் அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை வினோதமான அலறல் சத்தத்தை எழுப்பியுள்ளார்.

கிணற்றிலிருந்து கேட்ட மர்ம சத்தம்..

இதனால் இரவில் அதிக சத்தம் கேட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் லியு சுவானி எதற்காக இந்த பகுதிக்கு வந்தார் என்பதை விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த கிணற்றை மூட உத்தரவிட்டுள்ளனர்.