ஷோரூம் முன்..OLA ஸ்கூட்டருக்கு இறுதிச்சடங்கு செய்து ஒப்பாரி வைத்த நபர் - வைரல் வீடியோ!

India Ola Electric
By Swetha Aug 20, 2024 05:50 AM GMT
Report

ஸ்கூட்டருக்கு வாடிக்கையாளர் இறுதிச்சடங்கு செய்து ஒப்பாரி வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

OLA ஸ்கூட்டர்

ஓலா ஷோரூமில் ஒன்றில் சாகர் சிங் என்ற நபர் அங்கிருந்த மின்சார ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய நாள் முதலே அடிக்கடி ஸ்கூட்டர் பழுதாகி பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

ஷோரூம் முன்..OLA ஸ்கூட்டருக்கு இறுதிச்சடங்கு செய்து ஒப்பாரி வைத்த நபர் - வைரல் வீடியோ! | A Man Does Funeral To Ola Scooter Infront Showroom

இதனால் ஓலா நிறுவனத்தின் மீது அதிருப்தியிலிருந்த சாகர் சிங், தள்ளுவண்டியில் அந்த மின்சார ஸ்கூட்டரை மாலை மரியாதையுடன் ஏற்றிக்கொண்டு நேராக ஓலா ஷோரூம் சென்றுள்ளார். ஷோரூமின் முன்னாள் நின்றுகொண்டு மைக்கில் ஒப்பாரி பாடல்களைப் பாடத்தொடங்கினார்.

ஓலா ஸ்கூட்டர் அறிமுக தேதி அறிவிப்பு - எப்போ தெரியுமா?

ஓலா ஸ்கூட்டர் அறிமுக தேதி அறிவிப்பு - எப்போ தெரியுமா?

வைரல் வீடியோ

அதை பார்த்த சூழ்ந்த மக்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். சல்மான் கான் படத்தில் வரும் பிரபல சோகப் பாடலான Hum Dil De Chuke Sanam பாடலை சோகமான குரலில் ஓலா ஸ்கூட்டரை நோக்கி அவர் பாடியது அங்கிருந்தவர்களைச் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

ஷோரூம் முன்..OLA ஸ்கூட்டருக்கு இறுதிச்சடங்கு செய்து ஒப்பாரி வைத்த நபர் - வைரல் வீடியோ! | A Man Does Funeral To Ola Scooter Infront Showroom

ஏங்கும் இந்த இதயத்திலிருந்து பெருமூச்சு வெளியேறுகிறது, நான் என்ன குற்றம் செய்தேன், ஓலா என்னை தண்டித்தது, கொள்ளையடித்தது என்ற பொருள் உள்ளபடி அவர் அந்த பாடலை பாடியதே மக்களின் சிரிப்பலைக்குக் காரணம் ஆகும்.