தமிழகத்தில் மீண்டும் சோகம் : கொரோனாவுக்கு ஒருவர் பலி
இந்தியா முழுவதும் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் அதிகரித்துள்ளது, ஆகவே மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது.
அச்சுறுத்தும் கொரோனா
இந்த நிலையில் இன்று, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் எனும் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துகுடியில் உயிரிழப்பு
இவர் கடந்த 23ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
கடந்த மாதம் திருச்சியில் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், இன்று தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது