45 வயது நபருடன் மலர்ந்த காதல்... 10 வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கதி - பகீர் பின்னணி!

Karnataka Crime Murder
By Vidhya Senthil Mar 11, 2025 12:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

    45 வயது ஆண் மற்றும் 10ம் வகுப்பு மாணவி காட்டுக்குள் இருவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா 

கர்நாடக மாநிலம், பைவளிகே பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் பிரதீப் (42). தனியாக வசித்து வந்த இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிவந்துள்ளனர்.

45 வயது நபருடன் மலர்ந்த காதல்... 10 வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கதி - பகீர் பின்னணி! | A Man And School Girl Found Dead In Forest

ஒரு கட்டத்தில் இருவரும் தனிமையிலிருந்து வந்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி மாணவி திடீரென காணாமல் போயுள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியின் போன் செய்துள்ளனர். அப்போது சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது.தொடர்ந்து உறவினர் வீடுகளில் தேடியுள்ளனர்.

சுற்றுலா வந்த இஸ்ரேல் பெண்கள்.. நள்ளிரவில் கூட்டு வன்கொடுமை- பின்னணி என்ன ?

சுற்றுலா வந்த இஸ்ரேல் பெண்கள்.. நள்ளிரவில் கூட்டு வன்கொடுமை- பின்னணி என்ன ?

எங்குத் தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.விசாரணையில் மாணவி காணாமல் போன அதே நேரத்தில் ஆட்டோ ஓட்டுநர் பிரதீப்பும் காணாமல் போனது தெரியவந்தது.

 அதிர்ச்சி சம்பவம்

இதற்கிடையே, வனப்பகுதியில் இறந்த நிலையில் 2 சடலங்கள் இறந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர் ஆய்வு செய்தலில் காணாமல் போன ஆட்டோ ஓட்டுநர் பிரதீப் மற்றும் 10ம் வகுப்பு மாணவி என்பது தெரியவந்தது.

45 வயது நபருடன் மலர்ந்த காதல்... 10 வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கதி - பகீர் பின்னணி! | A Man And School Girl Found Dead In Forest

இதனையடுத்து இவர்களது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.