உங்களை விட மாட்டேன்..! சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்கும் ஆண் குரங்கு
ஆண் குரங்கு ஒன்று சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி தாக்கி வருகிறது.
வாகனத்தில் அடிப்பட்டு இறந்த தாய் மற்றும் குட்டி குரங்கு
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பூதுார் கிராமம் மலைகளின் அருகே அமைந்துள்ள மலைகளில் இருந்து குரங்குள் இந்த கிராமத்திற்கு உணவு தேடி வருவது வழக்கம்.
இந்த நிலையில் வழக்கம் போல உணவு தேடி குரங்குகள் வந்துள்ளது அப்போது ஒரு குரங்கு குடும்பத்தில் இருந்த பெண் குரங்கும் மற்றும் குட்டி குரங்கு ஆகியவை வாகனத்தில் அடிபட்டு இறந்துவிட்டது.
வாகன ஓட்டிகள் தான் தன் மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்துவிட்டதாக நினைத்த ஆண் குரங்கு சாலையில் வாகனத்தில் செல்வோரை மட்டும் துரத்துகிறது.
பழிவாங்க துடிக்கும் ஆண் குரங்கு
இருசக்கர வாகனத்தில் செல்வோரை மட்டும் துரத்தும் குரங்கால் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இருசக்கர வானத்தில் செல்வோரை குரங்கு கடித்ததில் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சாலையில் நடந்து செல்வோரை எதுவும் செய்யாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோரை மட்டும் குரங்கு தாக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வாகன ஓட்டிகளை கடிக்கும் இந்த ஆண் குரங்கை வனத்துறையினர் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.