உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

By Irumporai Nov 17, 2022 03:10 AM GMT
Report

தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது, இதன் காரணமாக சென்னை,திருவள்ளூர் , செங்கல்பட்டு உள்பட சில வட மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கடந்த 10 ம் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இதில் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு | A Low Pressure Area Formed Tamil Nadu Rain

குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத வகையில் 44 செ.மீ. மழை  பெய்தது , இதனால் அந்த பகுதியில் கடும் வெள்ளம் சூழ்ந்தது.

மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை 

இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக நவம்பர் 20, 21 ஆகிய  தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி , காரைக்கால் ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.