வகுப்பறையில் நடிகை தேவயானிக்கு லவ் லட்டர் - யார் கொடுத்தது தெரியுமா?
நடிகை தேவயானி பேட்டி ஒன்றில் தனக்கு வகுப்பறையில் லவ் லட்டர் கொடுக்கப்பட்ட நிகழ்வு ஒன்றை தெரிவித்துள்ளார்.
90ஸ்களில் முன்னணி நடிகை
1990 களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வளம் வந்தவர் தேவயானி. சுஷ்மா என்ற இயற்பெயர் கொண்ட இவர் திரையுலகிற்காக தனது பெயரை தேவயானி என்று மாற்றிக்கொண்டார்.
தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சன் டிவியின் பிரபலமான தொடரான கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்தன் மூலம் பெரும் வரவேற்பை பெற்றது அந்த தொடர்.
இந்த நிலையில் இயக்குநர் ராஜகுமாரனை கடந்த 2001 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளன.
அண்மையில் சினி உலகம் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகை தேவயானி தனக்கு நடந்த சில சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.
வகுப்பறையில் லவ் லட்டர்
அப்போது பேசிய அவர், தனக்கு காதல் கடிதம் கொடுக்கப்பட்ட நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நான் ப்ரீயா இருக்கும் போது ஆன்லைனில் ஒரு புரோகிராம் க்ளாஸ் ஒன்றை எடுத்தேன் பின்னர் ஸ்கூளில் ஆசிரியர்கள் லீவுகளில் செல்லும் போது கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களுக்கு க்ளாஸ் எடுத்தேன்.
எனக்கு மாணவர்களுக்கு பாடம் எடுப்பது மிகவும் பிடிக்கும், நான் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது மாணவர்கள் டீச்சர் நான் உங்களை டிவியில் பார்த்தேன் என்று சொல்வார்கள்.
எனக்கு லவ் லட்டர்ஸ், கவிதை எழுதுவார்கள், பின்னர் க்ளாஸ் நடத்தி கொண்டிருக்கும் பொது மாணவிகள் திடீரென வந்து லவ் லட்டர் கொடுப்பார்கள் என அவர் புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.