ஆவின் பால் பாக்கெட்டில் மிதந்த பல்லி - வாடிக்கையாளர் அதிர்ச்சி
சென்னையில் ஆவின் பால் பால்பாக்கெட்டில் பள்ளி ஒன்று மிதந்து வந்ததை கண்டு வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.
பால் பாக்கெட்டில் பல்லி
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள KG Eye Sprimrose என்ற அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒருவர் பச்சை நிற பால் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.
அப்போது அந்த பாக்கெட்டில் பல்லி மிதந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரையில் ஒருவர் வாங்கிய ஆவின் பாலில் ஈ இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து துணை மேலாளர் சிங்காரவேலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.மேலும் ஆவின் பாக்கெட்டுகளை பாக்கிங் செய்யும் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூபாய் 1000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.
ஆவின் பால் பாக்கெட்டில் மிதந்த பல்லி!
— Rajesh Krishnamoorthy ?❤️ (@journalistraj7) September 28, 2022
பள்ளிக்கரனையில் #kgeyesprimrose எனும் அப்பார்ட்மெண்டில் இன்று அதிகாலை பச்சை நிறம் கொண்ட அரைலிட்டர் ஆவின் பால் பாக்கெட்டு வாங்கியுள்ளர்னர். பாலை சூடுபடுத்த திறந்த போது #பல்லி மிதந்ததை கண்டு மிரண்டு போனார்கள் @Nousa_journo pic.twitter.com/wUX1EKBhiK