ஒரு லட்டு விலை ரூ. 24 லட்சம் - வாயடைத்துப்போன மக்கள்
                                    
                    India
                
                                                
                    Hyderabad
                
                        
        
            
                
                By Thahir
            
            
                
                
            
        
    ஹைதராபாத்தைச் சேர்ந்த பாலாபூர் கணேஷின் புகழ்பெற்ற 21 கிலோ லட்டு நேற்று ரூ.24.60 லட்சத்துக்கு ஏலம் போனது.
ஒரு லட்டு விலை ரூ. 24 லட்சம்
நேற்று விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு முன் பாலாபூர் கணேஷின் லட்டு ஏலம் நடந்தது. உள்ளூர் வியாபாரி வி லக்ஷ்மா ரெட்டி இந்த 21 கிலோ லட்டுவை வாங்கினார்.

கடந்த ஆண்டு பாலாபூர் கணேஷின் லட்டு ரூ.18.90 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த லட்டு வாங்குபவருக்கு நல்ல அதிர்ஷ்டம், நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை தருவதாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள்.
இதற்கிடையில், விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி மாநகரில் பெரிய அளவில் நடைபெற்று வருவதால், போலீசார் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    