நகைப்பட்டறையில் ஒரு கிலோ தங்கம் கொள்ளை - போலீசார் விசாரணை
கோவையில் நகைப்பட்டறையில் ஒரு கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒரு கிலோ நகை கொள்ளை
கோவையில் சண்முக நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். இவர் அதே பகுதியில் தங்க நகைப்பட்டறை நடத்தி வருகிறார்.
இவர் தனது தங்கப்பட்டறையில் 1067.850 கிராம் தங்கத்தை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி இரவு கடையில் பணிபுரியும் நோவா என்பவரிடம் கடை சாவியை ஒப்படைத்து விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நோவாவிடம் இருந்து சாவியை திருடிய கொள்ளையர்கள் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
தங்கம் கொள்ளை போனது குறித்து தங்கப்பட்டறை நகை உரிமையாளர் மோகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சுமார் 50 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்க நகையை மர்ம நபர் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.