அதிமுகவில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்ற நிலையில், சில கட்சிகளில் இருந்த முக்கிய நிர்வாகிகள் மற்ற கட்சிகளுக்கு மாறி வருகின்றனர்.
அந்தவகையில், மு.க.அழகிரி அவர்களின் முக்கிய ஆதரவாளரான பி.எம். மன்னன் அதிமுக கட்சியில் சேர்ந்துள்ளார்.
2014ஆம் ஆண்டு, மு.கருணாநிதி அவர்களால் மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது அவருடன் இருந்தவர் மன்னன் தான்.
சமீபத்தில் மன்னன் அதிமுகவில் சேரப்போகிறார் என்ற தகவல்கள் வெளியானது. நீண்ட நாட்களாக அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது.
மன்னன் முதலில் திமுகவில் சேர விருப்பம் தெரிவித்ததாகவும், அதை மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் திமுகவிலிருந்து பதில் கிடைக்காததால், இறுதியாக அவர் அதிமுகவில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.