நண்பரின் படுக்கையறைக்கு மனைவியை அனுப்பிய கணவன் - வீடியோ எடுத்து ரசித்த பயங்கரம்

Sri Lanka Police Sri Lanka Sexual harassment
By Thahir Nov 01, 2022 05:30 PM GMT
Report

இலங்கையில் நண்பருடன் உல்லாசமாக இருக்க தனது மனைவியை அனுப்பி வைத்து அதை வீடியோ எடுத்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனைவியை வற்புறுத்திய கணவன் 

இலங்கை பெந்தோட்ட பகுதியில் திருமணமான ஜோடி ஒன்று வசித்து வருகிறது (கணவனுக்கு வயது 50, மனைவிக்கு வயது 42).

இவர்களுக்கு இரண்டு குழுந்தைகள் உள்ளனர். குழந்தைகள் கொழும்புவில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் தனது 42 வயது மனைவியை கணவன் தனது நண்பரான 23 வயது இளைஞனுடன் உல்லாசமாக இருக்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார்.

இதற்கு மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவியை தாக்கி ஒப்புக் கொள்ள வைத்துள்ளார்.

கணவன், நண்பன் கைது 

பின்னர் தனது நண்பரின் படுக்கையறைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

A husband who sends his wife to a friend

இதையடுத்து மனைவி பெந்தோட்ட நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் போரில் கணவனையும் அவரது நண்பனையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சுற்றுலா சென்ற இடத்தில் வேறொரு இளைஞனுடன் தன்னை உல்லாசம் அனுபவிக்க சொன்னதாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து தப்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.