செருப்பு பிஞ்சிடும்..அண்ணாமலை புகைப்படம் எரிப்பு..திமுக - பாஜகவினர் இடையே கடும் வாக்குவாதம்

DMK BJP K. Annamalai Palanivel Thiagarajan
By Thahir Aug 14, 2022 08:52 AM GMT
Report

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகைப்படம் எரிக்கப்பட்ட போது அங்கு வந்த பாஜகவினர் திமுகவினருக்கு எதிராக கோஷம் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி

நேற்று தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

அப்போது ராணுவ வீரர் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. லட்சுமணன் உடலுக்கு அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

செருப்பு பிஞ்சிடும்..அண்ணாமலை புகைப்படம் எரிப்பு..திமுக - பாஜகவினர் இடையே கடும் வாக்குவாதம் | A Heated Argument Between Dmk And Bjp

ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்திருந்தார் அதனால் ஏராளமான பாஜக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு 

பின்னர் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு ராணுவ வீரரின் சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு சென்றனர். அப்போது விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது.

செருப்பு பிஞ்சிடும்..அண்ணாமலை புகைப்படம் எரிப்பு..திமுக - பாஜகவினர் இடையே கடும் வாக்குவாதம் | A Heated Argument Between Dmk And Bjp

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பாஜகவினரை அப்புறப்படுத்தினர்.மேலும் செருப்பு வீசிய பாஜகவினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திமுக - பாஜகவினர் இடையே வாக்குவாதம் 

இந்த நிலையில் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் திமுகவினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை தீயிட்டு எரித்தனர்.

செருப்பு பிஞ்சிடும்..அண்ணாமலை புகைப்படம் எரிப்பு..திமுக - பாஜகவினர் இடையே கடும் வாக்குவாதம் | A Heated Argument Between Dmk And Bjp

அங்கு வந்த பாஜகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அங்கு வந்த போலீசார் மோதல் ஏற்பட வண்ணம் இருதரப்பையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர்.

அப்போது திமுகவினர் பாஜகவினரை பார்த்து செருப்பு பிஞ்சிடும் என்று கோஷம் எழுப்பினர் அதற்கு பாஜகவினர் செருப்பு வந்திடும் என எதிர் கோஷம் எழுப்பினர். இரு தரப்பினரும் எதிராக கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.