ஆளுநர் வைக்கும் தேனிர் விருந்துக்கு 30 லட்சம் ரூபாய் - அமைச்சர் பிடிஆர் திடுக்கிடும் தகவல்
ஆளுநருக்கு எந்த வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது பற்றி நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
தாறுமாறாக செலவழித்த ஆளுநர்
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கேள்விக்கு விளக்கம் அளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
ஆளுநரின் செயலகம், சென்னை மற்றும் ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு 3 வகையில் நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார். பின்னர் ஆளுநர் மாளிகை செலவிட்ட தொகைகளை அமைச்சர் பட்டியலிட்டார்.

அதில், தேனிர் விருந்துக்கு ஆளுநர் மாளிகை 30 லட்சம் ரூபாய், யுபிஎஸ்சி மாணவர் கூட்டத்திற்கு ரூ.5 லட்சம் ரூபாய், ராஜ்பவன் ஊட்டியில் கலாச்சார நிகழ்ச்சி நடத்தியதற்கு 3 லட்சம் ரூபாய்
அனைத்து பணியாளர்களுக்கும் போனஸ் என்று ஒரு முறை 18 லட்சம் மற்றும் 14 லட்சம் ஒரு முறை என்றும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விதிமுறைகளை மீறி செலவு செய்யப்பட்டு கணக்குகள் அரசிடம் கொடுக்கப்பட்டு அதற்கான நிதி பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆர்.என்.ரவி ஆளுநரான பிறகு ஒதுக்கப்பட்ட நிதி வேறு ஒரு திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
எல்லா மாநிலத்திலும் ஆளுநருக்கு குறைவாக தான் நிதி ஒதுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.