18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மகள்.. பெற்றோருக்கு வந்த சாட்பாட் - ஷாக் பின்னணி!

California World Open AI
By Swetha Oct 08, 2024 08:30 AM GMT
Report

இறந்த பெண்ணின் போட்டோ ஏ.ஐ கேரக்டராக உருவாக்கியிருப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ந்தனர்.

இறந்த மகள்.. 

இன்றைய காலக்கட்டத்தில் ஏஐ தொழில்நுட்பம் மாபெரும் தாகத்தை ஏற்படுத்தி வருகிறது. அதை வைத்து ஏராளமான பணிகள் எளிதே நடக்கிறது. ஏஐயை பயன்ப்படுத்தி ஒருவரின் குரலை உருவாக்க முடியும். எனவே மறைந்த பிரபலங்களின் குரலில், சினிமா பாடல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மகள்.. பெற்றோருக்கு வந்த சாட்பாட் - ஷாக் பின்னணி! | A Girl Who Got Murdered Was Revived As Ai Chatbot

இருப்பினும் ஒரு சில நேரங்களில் ஏ.ஐ சில மோசமான விளைவுகள் ஏற்படுத்தும் என்பதும் நிதர்சனமான உண்மை. இதனை உணர்த்தும் விதமாக ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அமெரிக்காவில் ட்ரூ க்ரீசென்ட் என்பவரின் மகள் ஜெனிபர் ஆன், கடந்த 2016ம் ஆண்டு அவரது முன்னாள் காதலானால் கொலை செய்யப்பட்டார்.

இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேவை; போட்டி போட்ட மணமகன்கள் - அதிரவைத்த பின்னணி!

இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேவை; போட்டி போட்ட மணமகன்கள் - அதிரவைத்த பின்னணி!

சாட்பாட்

மகளின் நினைவாக அவரது தந்தை, இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஜெனிபர் கொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது போட்டோ மற்றும் பெயரைப் பயன்படுத்தி,

18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மகள்.. பெற்றோருக்கு வந்த சாட்பாட் - ஷாக் பின்னணி! | A Girl Who Got Murdered Was Revived As Ai Chatbot

சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த கேரக்டர் ஏ.ஐ., எனும் நிறுவனம் 'சாட் பாட்' உருவாக்கியிருப்பது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதை வைத்து பொதுமக்களுக்குத் தேவையான கஸ்டமர் சப்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 69 உரையாடல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

இதுபோன்று ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அதனை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரது தந்தை முன் வைத்தார். இது தொடர்பாக இறந்த பெண்ணின் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அவருக்கு ஆதரவு பெருகியதால் ஜெனிபர் ஆன்னின் சாட் பாட்டை அந்நிறுவனம் நீக்கியது.