ஒரு நாள் பாக்கெட் மணி 40 லட்சமா ? - இணையவாசிகளை கடுப்பேத்திய டிக் டாக் பிரபலம்

Viral Video United States of America
By Irumporai Jul 04, 2022 06:30 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

நியூயார்க்கினைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஒரு நாள் செல்வுக்காக 40 லட்சம் செலவு செய்வதாக கூறியுள்ளார்.

ஒரு நாள் பாக்கெட் மணி 40 லட்சம்

நியூயார்க்கை ச் சேர்ந்த ரோமா அப்டெசிலம் என்பவர் டிக்டாகில் பிரபலமனாவர் இவரை டிக் டாக்கில் இதுவரை சுமார் 79 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள்.

ஒரு நாள் பாக்கெட் மணி 40 லட்சமா ? - இணையவாசிகளை கடுப்பேத்திய டிக் டாக் பிரபலம் | A Girl Spends Rs 40 Lakh A Day Says

இந்த நிலையில் ரோமாவின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம் அவரின் ஒரு நாள் பாக்கெட் மணி அமெரிக்க மதிப்பில் 50 ஆயிரம் டாலர்கள், அதாவது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அது தான் உண்மை இதனை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள ரோமா இந்த தகவலினை தனது இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த ரோமோ, நான் தினமும் காலையில் எழுந்து ஜிம்முக்கு போவேன்.

புருவங்களை அழகுசெய்ய நாற்பதாயிரம்

பின்னர் எனது தோழிகளுடன் ஷாப்பிங்கிற்குச் செல்வேன். இதற்காக தினமும் நான் செலவு செய்வது 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், எனவும் கூறியுள்ளார். இவரின் இந்தப் பதிவு பலரை கோபமாக்கியுள்ளது , குறிப்பாக பலரது குடும்பத்தில் உள்ள லிட்டில் பிரின்செஸ்களை எனபதுதான் மறுக்கமுடியாத உண்மை

இவர் தனது மற்றொரு இன்ஸ்டா பதிவில், தனது கண் புருவங்களை அழகு படுத்த செலவு செய்த தொகையினை கூறியிருந்தார். அவர் செலவு செய்த தொகை 600 டாலர் என குறிப்பிட்டிருந்தார். அது இந்திய மதிப்பில் 47,370 ரூபாயாகும்.