பெண் அதிகாரியை விரட்டி விரட்டி தாக்கிய மணல் கடத்தல் கும்பல்
பீகார் மாநிலத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து சோதனைக்கு சென்ற சுரங்கதுரை பெண் அதிகாரியை மணல் கடத்தல் கும்பல் அடித்து துரத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அதிகாரி மீது தாக்குதல்
பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் உள்ள பிஹதா நகரில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக சுரங்கத்துறைக்கு தகவல் வந்துள்ளது இதையடுத்து அங்கு சோதனைக்காக பெண் அதிகாரி ஒருவர் சென்றிருக்கிறார்.

அப்பொழுது அங்கு வந்த பெண் அதிகாரியை கண்ட மணல் கடத்தில் கும்பல் அவரை கற்களால் தாக்கி, அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதில் அந்த பெண் அதிகாரியை அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவதும் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து எஸ்.பி. ராஜேஷ் குமார், "பிஹ்தா நகரில் மணல் அள்ளுவது தொடர்பான புகார் குறித்து நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது
இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை எங்களால் உறுதி படுத்த முடியவில்லை. அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில் தான் தெரியவந்தது.
இதில் பெண் உட்பட மூன்று அதிகாரிகள் தாக்கப்பட்டிருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பான 44 பேரை கைது செய்திருக்கிறோம், தலைமறைவானவர்களை தேடிக்கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.