மகிழ்ச்சியுடன் மீண்டும் சிறைக்கு சென்ற பேரறிவாளன்..எப்போது வெளியே வருவார்?
ஜாமீன் வழங்கப்பட்டத்தின் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் அவருடைய தாயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 28முதல் தற்போது வரை பேரறிவாளன் சுமார் 9 மாத காலமாக பரோல் வழங்கப்பட்டு வீட்டிலேயே தங்கியிருந்தார்.
மேலும் தமிழக முதலமைச்சருக்கு பேரறிவாளனின் தாயார் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார் இதன் காரணமாக 31 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாமீன் வழங்கப்பட்டது.
பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் இன்று பரோலை ரத்து செய்ய வேலூர் டிஎஸ்பி மணிமாறன் தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் புழல் சிறைக்கு பேரறிவாளன் அழைத்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து புழல் சிறைக்கு சென்று பரோலை ரத்து செய்த பின் பேரறிவாளன் ஜாமினில் வெளியே வருவார் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan
