சென்னையில் தொடங்கியது உணவு திருவிழா
சென்னையில் உணவு திருவிழா கோலகலமாக தொடங்கியுள்ளது.
தொடங்கியது உணவு திருவிழா
உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடைபெறும் சிங்கார சென்னையில் உணவு திருவிழா 2022 இன்று காலை தொடங்கியது.
3 நாட்கள் நடைபெறும் உணவு திருவிழாவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர் பாபு ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
உணவு திருவிழாவில் 200 திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் முன்னணி உணவு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆரோக்கியமான உணவுகள் பற்றி உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வும் செய்யப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் உணவு திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் இந்த உணவு திருவிழாவில் கலந்து கொள்ள இலவச அனுமதி வழங்கப்படுகிறது.