ஆவின் பால் பாக்கெட்டில் மிதந்த ஈ - அதிர்ச்சியில் பொதுமக்கள்
மதுரையில் ஆவின் பாக்கெட் ஒன்றில் ஈ மிதந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்தார்.
பால் பாக்கெட்டில் மிதந்த ஈ
மதுரையில் ஆவின் நிறுவனம் சார்பில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான கடைகள் இயங்கி வருகின்றனர்.
ஆரப்பாளையம் அடுத்த கீழமாத்துார் போன்ற பகுதிகளில் உள்ள டெப்போக்களில் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அங்கு நேற்று பெண் வாடிக்கையாளர் ஒருவர் அரை லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டை வாங்கியுள்ளார். வீட்டுக்கு வந்து பார்த்த போது பால் பக்கெட்டில் ஈ மிதந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அந்த பெண் பால் பக்கெட்டை டெப்போவில் ஒப்படைத்துள்ளார். மேலும் ஆவின் அதிகாரிகள் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளை வெளியிடக் கூடாது என எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் பால் பக்கெட்டில் மிதந்த ஈ குறித்தான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.