ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் கருப்பின பெண்
இங்கிலாந்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் கருப்பினத்தைச் சேர்ந்த முதல் நீச்சல் வீராங்கனை என்ற சிறப்பை அலைஸ் டியர்லிங் பெற்றுள்ளார்.
மராத்தான் நீச்சலில் திறன்பெற்ற இவர் இதுவரை வெள்ளையர்கள் மட்டும் இடம் பெற்றிருந்த பிரிட்டன் நீச்சல் அணியில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அலைஸ் போர்ச்சுகலில் நடைபெற்ற 10 கிலோ மீட்டர் மராத்தான் நீச்சலில், பந்தய இலக்கை 2 மணி நேரம் 2 நிமிடங்கள் ஒரு நொடியில் கடந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
முதல் 9 இடங்களைப் பிடிப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில், அதில் ஒருவராக அலைஸ் டியர்லிங் இடம்பிடித்தார்.
கொரோனா முதல் அலையில் இருந்தே இதற்காக தீவிரமாக கடினமாக பயிற்சி எடுத்து வந்ததாகவும் , கடும் போராட்டத்திற்குப் பின் தமது கனவு நனவாகியிருப்பதாகவும் அலைஸ் தெரிவித்துள்ளார்.