காதல் மோகம்... கருக்கலைப்பில் துடித்த மாணவி உயிரிழப்பு - எஸ்கேப் ஆன காதலன்!
காதலிக்கு கருக்கலைப்பு செய்ததில் ரத்தப்போக்கு அதிகமாகி உயிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
தெலுங்கானா, பூசுகுடேனைச் சேர்ந்தவர் புக்யா நந்து. இவர் முளகாப்பள்ளி மண்டலம் வி.கே ராமாவரம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி, முதலில் காதலுக்கு சம்மதிக்கவில்லை.
ஆனால் நந்து விடாப்பிடியாக அவரை சம்மதிக்க வைத்துள்ளார். பின்னர் பழகிய சில நாட்களிலேயே அந்த மாணவியுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமானார், திருமணத்திற்கு முன்பாகவே மாணவி கர்ப்பமானதால் நந்து காதலிக்கு கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டார்.
கருக்கலைப்பு
பத்ராச்சலத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு காதலியை அழைத்துச் சென்றார், காதலி என கூறாமல் மனைவி எனக் கூறி மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவர்களும் அதை நம்பி அந்த பெண்ணுக்கு சிகிச்சை கொடுத்தனர்.
அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உடல்நிலை மோசமானது. இதை அறிந்த காதலன் நந்து அங்கிருந்து தப்பித்து விட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.
மாணவி உயிரிழப்பு
அந்தப் பெண்ணை அழைத்து வந்த இளைஞரை மருத்துவர்கள் தேடினர். ஆனால் அவர் தப்பித்தது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த பெண்ணின் விவரத்தை சேகரித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைக்கேட்ட மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியில் கதறி அழுதனர். மேலும் தப்பியோடிய இளைஞர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.