இளைஞர்களை வசியப்படுத்திய தில்லாலங்கடி பெண் சாமியார் - போலீஸ் மீது தாக்குதல்

Tamil nadu Tamil Nadu Police
By Thahir Mar 10, 2023 06:37 AM GMT
Report

இளைஞர்களை தன் வசப்படுத்தி வரும் பெண் சாமியார் என்று கூறிக் கொள்ளும் கீதாவின் சீடர் எஸ்ஐ மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுசு புதுசா தோன்றும் சாமியார்கள் 

தமிழகத்தில் நாளுக்கு நாள் புதுசா புதுசா சாமியார் என்று கூறி கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது.

நவீனமயமாகும் இவ்வுலகில் இவர்களை நம்பி சென்று அருள்வாக்கு கேட்கும் மக்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அதிலும் இளையதலைமுறையை சார்ந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த மாதிரியான சாமியார்களை நம்பி சென்று வாழ்க்கையை வீணடித்து வருகின்றனர்.

வெளியில் அருள்வாக்கும் வீட்டிற்குள் அத்துமீறலிலும் ஈடுபடும் சாமியார்கள் இன்றைய கால கட்டத்தில் அதிகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் பெண் சாமியார் கீதா என்பவர் இளைஞர் ஒருவருடன் கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தம் கொடுத்து ரீல்ஸ் செய்த வீடியோ காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரை மறந்து பெண் சாமியாருக்கு பணிவிடை 

 கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி இவருடைய மகன் பார்த்திபன் 21 வயதான இவர் ஓமலுாரில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பார்த்திபனிடம் இருந்து எந்த தகவலும் வராத நிலையில் அவரது தந்தை குப்புசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து தனது மகன் பார்த்திபனை பல இடங்களில் தேடி உள்ளார். ஆனால் எங்கும் தென்படாத அவரை நினைத்து மனம் நொந்து வாடியுள்ளார் குப்புசாமி.

இந்த நிலையில், போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரம் ஓம் சக்தி கோவிலில் பெண் சாமியார் கீதாவுக்கு பணிவிடை செய்து வந்துள்ளார்.

A female preacher who captivated the youth

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குப்புசாமி தன் மகனை விடுவிக்குமாறு வேண்டுகோள் வைத்து மன்றாடி உள்ளார். ஆனால் தந்தையின் மன்றாடலை கேட்டும் மனம் இறங்காத பார்த்திபன் வீட்டிற்கு தனது தந்தையுடன் வருவதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் தந்தை புகார் 

இதனால் மனம் உடைந்து போன அவரது தந்தை குப்புசாமி காவல் நிலையம் சென்று தன் மகனை மீட்டு தரும்படி புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து அங்கு சென்ற போச்சம்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் குமார் தலைமையிலான காவலர்கள் பார்த்திபனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

அப்போது அவர்களுடன் பெண் சாமியார் கீதா மற்றும் காட்டகரம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் உள்ளிட்டோரும் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

குப்புசாமி சாந்துார் கிராமத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் பூபாலனை தன்னுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

பாமக பிரமுகரை தாக்கி தில்லாலங்கடி பெண் சாமியார் 

அப்போது பூபாலன் பெண் சாமியார் கீதாவிடன் மகனை பெற்றோருடன் ஒப்படைத்து விட வேண்டியதுதானே என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தில்லாலங்கடி பெண் சாமியார் கீதா, பூபாலனை தாக்கியுள்ளார். இதை பார்த்த போச்சம்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் குமார் தடுக்க முயன்றுள்ளார்.

அப்போது பெண் சாமியார் கீதாவுடன் வந்த வேல்முருகன் என்ற சீடர் காவல் உதவி ஆய்வாளர் குமாரை சட்டையை பிடித்து தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

A female preacher who captivated the youth

சிறையில் அடைப்பு 

இந்த நிலையில் பெண் சாமியார் கீதா மற்றும் அவரது சீடர் வேல்முருகனை உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்வதற்காக ஜீப்பில் ஏற்றியுள்ளனர்.

அப்போது அங்கு தனது படையுடன் வந்த இந்து மக்கள் கட்சி தெய்வீக பேரவை மாநில செயலாளர் அசோக் ஜீ போலீஸ் ஜீப்பை எடுக்கவிடாமல் அடாவடி செய்தார்.

போலீசார் அவரிடம் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காத ஜீ என்னை ஜீப்பை விட்டு ஏற்றி விட்டு கூட்டுட்டி போ என ஒருமையில் போலீசாரை வசைப்பாடினார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த போலீசார் உன்னால் முடிந்தைதை பார்த்துக் கொள் என்று கூறி விட்டு தில்லாலங்கடி பெண் சாமியார் கீதாவையும், சீடர் வேல்முருகனையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி இளைஞர்களை வழிக்கெடுக்கும் இத்தகைய சாமியார்களை களை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.