திடீர் வலி - ஓடும் பேருந்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த கண்டக்டர்
ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் குழந்தைப் பெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரசவ வலி
பெங்களூரில் இருந்து சிக்கமகளூர் நோக்கி கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் நிறைமாத கர்ப்பிணி பெண் பாத்திமா(22) என்பவர் பயணித்துள்ளார்.

இந்நிலையில், ஹாசன் அருகே உதயபுரா பகுதியில் பெர்ருந்து சென்றுக் கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதில் சக பயணிகள் அனைவரும் பதற்றத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தனர்.
நெகிழ்ச்சி சம்பவம்
மேலும், அப்பகுதியில் மருத்துவமனை எதுவும் இல்லாத சூழலும் இருந்துள்ளது. இதனால் துரிதமாக செயல்பட்ட பேருந்து நடத்துனர் வசந்தம்மா, ஆண் பயணியரை பஸ்சில் இருந்து கீழே இறங்க சொல்லியுள்ளார். பின் பெண் பயணி ஒருவர் உதவியுடன் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
அதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தாயும், சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பிரசவித்த பெண்ணுக்கு நடத்துனர் சில பயணியரிடம் இருந்து 1,500 ரூபாயை வாங்கி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசந்தம்மா 20 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் தொழிலாளர் வார்டில் உதவியாளராக இருந்த வேலையை விட்டுவிட்டு KSRTC யில் கண்டக்டராக சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.