காதல் திருமணம் செய்த மகள்.. விரக்தியில் தந்தை எடுத்த முடிவு - மிரண்ட கிராம மக்கள்!
காதல் திருமணம் செய்த மகள் இறந்துவிட்டதாகச் கூறி இரங்கல் செய்தியை வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காதல் திருமணம்
ராஜஸ்தான் மாநிலத்தில் விக்ரம் சம்வத் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் விம்லா பி.எட். முடித்துவிட்டு ஆசிரியராக அதே பகுதியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இளைஞர் ஒருவரைக் காதலிப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் இந்த காதல் விவகாரத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை.
மேலும் தந்தை மகளின் காதலைக் கடுமையாக எதிர்த்து உள்ளார். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் பெற்றோரின் எதிர்ப்பை மீறித் தனக்குப் பிடித்தவரைக் விம்லா காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
இரங்கல் செய்தி
அங்கு விம்லா தனது பெற்றோருடன் செல்ல மறுத்துத் தனது காதல் கணவருடனே இருக்க விரும்புவதாகச் சொல்லியுள்ளார்.இதனால் விக்ரம் சம்வத் மன உளைச்சல் அடைந்தார். இதனையடுத்து தனது மகள் இறந்துவிட்டதாகச் செய்தி நாளிதழில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அந்த இரங்கல் செய்தியில், "யோகா லிக்கி கிராமமான பட்னோரைச் சேர்ந்த குமார் ஜெகதீஷின் ராம் ராம் படியுங்கள். எனது மகள் விமலா குமாரி காலமானார். அவரது 9வது நாள் 11.12.2024 புதன்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அனைவரும் பங்கேற்கவும் என்று தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.