இழப்பீடு தராததால் 3 ஏக்கர் நெற்பயிருக்கு தீ வைத்த விவசாயி
பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகை வழங்கப்படாததால் விவசாயி ஒருவர் நெற்பயிரை தீ வைத்து எரித்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெற்பயிருக்கு தீ வைத்த விவசாயி
வேலுார் மாவட்டம் காட்பாடியை அடுத்துள்ள பொன்னை பகுதியை ஒட்டியுள்ளது கொண்டாரெட்டிப்பள்ளி கிராமம்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயியான சிவக்குமார் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு ஐ.ஆர்.50 என்ற ரக நெற்பயிரை 3 ஏக்கர் நிலத்தில் பயரிட்டுள்ளார்.
பயிரிடப்படும் போது பயிருக்கு மத்திய அரசின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் 1300 ரூபாய் செலுத்தி பயிர்க் காப்பீடு செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பெய்த கனமழையில் நெற்பயிரானது சேதமடைந்தது.
இதைத் தொடர்ந்து சிவக்குமார் கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொண்டு என பயிர் மழையின் காரணமாக சேதமடைந்துவிட்டது எனக் கூறி இழப்பீடு கோரியுள்ளார்.
இதனிடையே அதிகாரிகள் தற்போது வரை சேதமடைந்த பயிரை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யவில்லை, இழப்பீடு வழங்கவில்லை என நெற்பயிரை எரித்து தீக்கிரையாக்கினார்.