நடிகை ஆண்ட்ரியாவை காதலித்து ஏமாற்றிய பிரபல அரசியல்வாதி? அரைகுறை ஆடையுடன் போட்டோ வெளியீடு
சினிமாவில் அறிமுகம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா, 2007 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர், பின்னர் பல படங்களில் முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த ஆண்ட்ரியா இரண்டு வருடங்கள் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில் அன்னயும் ரசூல் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். நடிகர் மிஷ்கினின் பிசாசு 2 படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்தப் படத்தில் ஆண்ட்ரியாதான் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
அனிருத்துடன் காதல்
நடிகை ஆண்ட்ரியா சினிமாவில் அறிமுகமானபோது இசை அமைப்பாளர் அனிருத்தை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுசி லீக்ஸ் ஆண்ட்ரியா மற்றும் அனிருத்தின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் இருவரும் பிரிந்தனர். காதல் பிரிவு குறித்து ஆண்ட்ரியா ஏதும் தெரிவிக்காத நிலையில், வயது வித்தியாசத்தால் காதல் முறிந்ததாக இசையமைப்பாளர் அனிருத் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே திருமணமான ஒரு பிரபலத்துடன் தனக்கு காதல் இருப்பதாகவும் ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அந்த உறவில் இருந்த தான் பதற்றத்தை உணர்ந்ததாகவும், ஆயுர்வேத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாகவும் நடிகை ஆண்ட்ரியா தெரிவித்து இருந்தார். ஆனால் திருமணமான பிரபலம் யார் என்பதை ஆண்ட்ரியா வெளியிடவில்லை.
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு?
காதல் என்ற பெயரில் பல இடர்பாடுகளை சந்தித்த நடிகை ஆண்ட்ரியா இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹேப்பி இதயம் ( எமோஜி ) டே என பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்பு நிற ஆடை அணிந்து போட்டோஷுட் செய்து தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.