திடீரென பதவி விலகிய பிரபல அமைச்சர் - அரசியலில் பரபரப்பு

Punjab
By Thahir Jan 08, 2023 04:46 AM GMT
Report

பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சராக பொறுப்பேற்று இருந்த ஒருவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பதவி விலகி அமைச்சர் 

கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் அங்கு ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

முதலமைச்சராக பகவத்மான் சிங் என்பவர் பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் பதவி ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவர் பாஜா சிங் சராரி என்பவர் திடீரென அமைச்சர் பதவியிலிருந்து விலகி உள்ளதாகவும் கட்சிக்கு உண்மையான விசுவாசியாக தொடர்ந்து இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

A famous minister who resigned suddenly

தனிப்பட்ட காரணங்களுக்காக அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்றும் கட்சியில் ஒரு போர்வீரனாக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில அமைச்சர் ஒருவர் திடீரென பதவி விலகி இருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது