விமான நிலையத்தில் பிரபல நடிகர் அதிரடி கைது
சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வந்த பிரபல நடிகரை மும்பை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
அறிமுகம்
பிக்-பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகர் டிகமல் ரஷீத் கான். சினிமா தயாரிப்பாளரான இவர் "தேஷ்துரோகி" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
பல சர்ச்சை கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் இவர், 2009 ஆம் ஆண்டு இந்தியில் நடந்த பிக்-பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமானார்.

திரைப்படங்களை விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த கமல் ரஷீத் கான் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர்கள் ரிஷி கபூர் மற்றும் இப்ரான் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.
அதிரடி கைது
இந்த சம்பவம் தொடர்பாக கமல் ரஷீத் கான் மீது புகார் அளிக்கப்பட்டது. அதே சமயம், இதனை மும்பை போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் கமல் ரஷீத் கான் நேற்றிரவு துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். இதனை அறிந்த மும்பை போலீசார் கமல் ரஷீத் கானை மும்பை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
இதனால் கமல் ரஷீத் கான் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.