வானங்களை மூடிய புழுதி..நெடுஞ்சாலையில் 70க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதல் - 6 பேர் பலி

United States of America Death
By Thahir May 02, 2023 01:10 PM GMT
Report

அமெரிக்காவில் இலினாய்ஸ் மாகாணத்தில் வீசிய புழுதிப்புயல் நெடுஞ்சாலைகளை சூழ்ந்ததால் வாகனங்கள் ஒன்றொடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

சாலைகளை மூடிய புழுதிப்புயல் - 6 பேர் பலி 

அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் வீசிய கடுமையான புழுதிப்புயலால் சாங்கமன், மாண்டகோமெரி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புழுதிப்புயல் சூழ்ந்தது.

இதனால் நெடுஞ்சாலைகளில் சென்ற சுமார் 70க்கும் மேற்பட்ட வாகனங்கள் ( கார், லாரிகள்) ஒன்றுடன் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளாகின.

A dust storm in America

இந்த விபத்துக்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும், 37 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, காற்றின் வேகம் மணிக்கு சுமார் 35 முதல் 45 கி.மீ வரை இருக்க கூடும் என்றும் நெடுஞ்சாலைகளில் பயணம் மெற்கொள்வதை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.