Tuesday, Apr 8, 2025

பேருந்தில் குடிபோதையில் ஏறிய பயணி - எட்டி உதைத்து வெளியே தள்ளிய நடத்துனர்

Viral Video Karnataka
By Thahir 3 years ago
Report

மங்களூரில் அரசு பேருந்தில் குடிபோதையில் ஏற முயன்ற பயணி ஒருவரை நடத்துனர் எட்டி உதைத்து வெளியே தள்ளிய வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எட்டி உதைத்து தாக்கிய நடத்துனர் 

கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள ஈஸ்வர்மங்களாவில் குடிபோதையில் வந்த நபர் ஒருவர் அங்கிருந்த அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்து நடத்துனர் அவரை கன்னத்தில் தாக்கியுள்ளார்.

பேருந்தில் குடிபோதையில் ஏறிய பயணி - எட்டி உதைத்து வெளியே தள்ளிய நடத்துனர் | A Drunken Passenger Boarded Bus Kicked Conductor

அப்போது மது போதையில் இருந்த அவர் பேருந்தின் கம்பியை இறுக்கமாக பிடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நடத்துனர் மது போதையில் இருந்த பயணியை படியில் இருந்து எட்டி உதைத்து வெளியே தள்ளினார்.

இதில் நிலைதடுமாறி அந்த நபர் கீழே விழுந்தார். பின்னர் அரசு பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

மது போதையில் இருந்த பயணியை தாக்கும் வீடியோ சமூக வளைத்தலங்களில் வைரலான நிலையில் புத்துார் கோட்ட மேலாளர் நடத்துநரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.