கொட்ட போகும் கனமழை! வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
TN Weather
Weather
By Thahir
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென் தமிழகம் மற்றும் குமரி கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள ஒரு சில இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 690 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருக்கிறது.
நாகையில் இருந்து 600 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.