? Live: மாமல்லபுரத்தை மிரட்டும் பேய் காற்று - வீடுகளில் முடங்கிய மக்கள்
TN Weather
Weather
Mandous Cyclone
By Thahir
மாண்டஸ் புயலின் வெளிப்புறப் பகுதி கரையை கடந்து வருவதால் மாமல்லபுரத்தில் பேய் காற்று வீசி வருகிறது.
மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தரைக்காற்றின் வேகமும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கனமழையும் பெய்து வருகிறது.
மாமல்லபுரத்தில் புயலின் வெளிப்பகுதி கரையை கடந்து வரும் நிலையில் மீனவ கிராமங்களில் பலத்த காற்று வீசி வருகிறது இதனால் மீனவர்கள் தொடர்ந்து தங்களது பொருட்களை பாதுகாத்து வருகின்றனர்.
மாமல்லபுரத்தைச் சுற்றிலும் பேய் காற்று வீசி வருவதால் சாலைகளில் ஆள் நடமாட்டம் இன்றி காணப்படுகிறது ஆங்காங்கே போலீசார் அமைத்துள்ள தடுப்புகளும் சாலைகளில் வீழ்ந்து கிடக்கின்றனர்.