சென்னை மெட்ரோ பணியின் போது அரசு பேருந்து மீது கிரேன் மோதி விபத்து
சென்னை மெட்ரோ பணியின் போது அரசு பேருந்து மீது மீது கிரேன் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து சேதமடைந்தது.
பேருந்து மீது மோதி விபத்து
சென்னை வடபழனியில் இன்று காலை 5 மணிக்கு மாநகரப் பேருந்த வடபழனி பனிமலையில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றது.
அப்போது பேருந்து நெக்சா மால் அருகே சென்ற போது கிரேன் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.
காலை நேரம் என்பதால் பேருந்தில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாநகர பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.