உல்லாசத்தின் போது விபரீதம்..!முதலிரவின் போது துடிதுடித்து உயிரிழந்த தம்பதி
முதலிரவின் போது தம்பதி ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலிரவின் போது உயிரிழந்த தம்பதி
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோதியா பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் யாதவ் இவருக்கு வயது 22. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா யாதவ் என்ற 20 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து தம்பதிகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு தம்பதிகளுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் முதலிரவு அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் தம்பதிகள் வெளியே வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது படுக்கையறையில் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
இதைப் பார்த்து அதிரச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தம்பதி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே இறப்பின் உண்மை என்பது தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தம்பதிகள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனரா? அல்லது பாலியல் இன்பத்திற்கான மாத்திரைகள் சாப்பிட்டது ஏதேனும் பக்க விளைவு ஏற்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.