வீட்டிலேயே பிரசவம் பார்த்த தம்பதி - பதறிப்போய் வந்த சுகாதாரத்துறை!
குழந்தையை வீட்டிலேயே இருந்து சுகப்பிரசவமாக தாய் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிலேயே பிரசவம்
மயிலாடுதுறை, சீர்காழி அருகே எருக்கூரைச் சேர்ந்தவர்கள் ஜான் - பெல்சியா தம்பதினர். இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது, 2வது முறையாக பெல்சியா கர்ப்பமாக இருந்துள்ளார். முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததால் அடுத்த குழந்தையும் அறுவை சிகிச்சை செய்துதான் ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.
ஆண் குழந்தை
ஆனால் அதை விரும்பாத தம்பதியினர் இரண்டாவது குழந்தையை சுகப்பிரசவத்தில் வீட்டிலேயே பெற்றெடுக்க முடிவுசெய்து அதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வந்துள்ளனர். மருந்து, மாத்திரை, ஊசிகள் எதுவும் பயன்படுத்தாமல் பராமரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பெல்சியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதற்கு முன்னேற்பாடாக இருந்த தம்பதியினர் வீட்டிலேயே தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதனையடுத்து சிறிது நேரத்தில் சுகப்பிரசவத்தின் வாயிலாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நெகிழ்ச்சி
தொடர்ந்து, குழந்தை பிறந்து நஞ்சுகொடி வருவதற்காக காத்திருந்துள்ளனர். இதற்கிடையில் பிரசவம் நடப்பதைத் தெரிந்து கொண்ட சுகாதார துறையினர் அங்கு வந்து உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.
ஆனால் அதற்கு தம்பதியினர் மறுத்ததால், பரிசோதனை செய்துவிட்டு திரும்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து, அந்த தம்பதி "நாங்கள் நினைத்தபடி சுகபிரசவத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தையை பெற்றெடுத்தது எங்களுக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறியுள்ளனர்.