நாங்க சுனாமிலேயே சும்மிங் போடுவோம்... மழைநீரில் அந்தர்பல்டி அடித்த குடிமகன்

By Thahir Aug 27, 2022 07:45 AM GMT
Report

மது போதையில் சாலையில ஓடிய மழைநீரில் அந்தர்பல்டி அடித்து அசராமல் எழுந்து சென்ற குடிமகனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொட்டிய கனமழை 

தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் கடந்த சில தினங்களாக பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை பொருத்தவரை கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது.

குடிமகனின் அந்தர்பல்டி 

இந்நிலையில் மாலையில் தீடிரென வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம்,  தம்பிபட்டி,  மகாராஜபுரம்,  கோபாலபுரம்,  பிளவக்கல் அணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

நாங்க சுனாமிலேயே சும்மிங் போடுவோம்... மழைநீரில் அந்தர்பல்டி அடித்த குடிமகன் | A Citizen Who Was Splashed In Rainwater

இந்த நிலையில் வத்திராயிருப்பில் சாலையில் ஓடிய மழை நீரில் மது போதையில் குடிமகன் ஒருவர் அந்தர்பல்டி அடித்து அசராமல் எழுந்து சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.