Saturday, Apr 5, 2025

உன்னோடு குளிப்பது சுகம் அல்லவா.. தேங்கிய மழை நீரில் உல்லாசமாக படுத்து நீச்சல் அடித்த குடிமகன்

Tamil nadu
By Thahir 2 years ago
Report

சென்னையில் தேங்கி நிற்கும் மழை நீரில் குடிமகன் ஆனந்தமாக நீச்சல் அடிக்கும் விடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையை மிரட்டும் கனமழை 

சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீர்களை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, வளசரவாக்கம், விருகம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது.

A citizen swimming in stagnant rain water

தொடரும் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிமகன் சேட்டை 

இந்த நிலையில் சென்னை புலியந்தோப்பு பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் குடிமகன் ஒருவர் ஆனந்தமாக படுத்து நீச்சல் அடித்தார்.

A citizen swimming in stagnant rain water

குடிமகன் கொட்டும் கனமழை என்றும் பராமல் ஆனந்தமாக படகோட்டியும், படுத்து நீச்சல் அடித்தும் ஜாலியாக இருக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.