இரண்டு உறுப்புகளுடன் பிறந்த குழந்தை..! ஆணா, பெண்ணா? என தெரியாமல் தவித்த தாய்..!
பிறந்த குழந்தை ஆணா? பெண்ணா என தெரியவில்லை என்று பெற்ற தாய் ஒருவர் கண்ணீர் விடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனை அளித்த சிகிச்சை
சென்னை புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வனிதா. இவர் கர்ப்ப காலத்தில் இருந்து 9 மாத காலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
கர்ப்ப காலத்தின் போது ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு வரும் போது மருத்துவர்கள் அறிவுறுத்திய அனைத்து பரிசோதனைகளையும் செய்துள்ளார்.
பின்னர் 9 மாதம் கர்ப்பமாக இருந்த போது சென்னை எழும்பூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் வனிதா. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து மே 10 அன்று அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.
அப்போது மருத்துவர்கள் வனிதாவிடம் அனாமலி ஸ்கேன் (anomaly scan) எங்கே எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்ததாக கூறியுள்ளார்.
பின்னர் அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் குழந்தை ஆணா? பெண்ணா? என கேட்ட போது மருத்துவர்கள் உங்கள் கணவரிடம் சொல்கிறோம் என்று பதில் அளித்துள்ளனர்.
இரண்டு உறுப்புகளுடன் பிறந்த குழந்தை
இதையடுத்து அவரின் கணவரிடம் பேசிய மருத்துவர்கள் நீங்கள் திருமணம் சொந்தத்தில் செய்தீர்களா? அல்லது வெளியே பெண் எடுத்தீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு வனிதாவின் கணவர் நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
பின்னர் மருத்துவர்கள் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரியவில்லை குழந்தைக்கு இரண்டு உறுப்புகளும் உள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும் குழந்தைக்கு இதயம், மற்றும் மூளையில் பிரச்சனை இருப்பதாகவும் குழந்தைக்கு மூச்சே விடமுடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். குழந்தையை பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
ஒரு மாத காலம் குழந்தை உடல் நல பாதிப்புடன் இருந்துள்ளது. அப்போது திடீரென குழந்தை வாய், மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. இதை கண்டு தாய் வனிதா கதறியுள்ளார்.
ஒரே மாதத்தில் உயிரிழந்த பரிதாபம்
பின்னர் குழந்தை எந்த பாலினம் என்பதே தெரியாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து வனிதாவுக்கு 9 மாதம் சிகிச்சை கொடுத்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உங்களுக்கு எதுவும் குழந்தை வளர்ச்சி பற்றி தெரிவிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பினர்.
எதுவும் தெரிவிக்கவில்லை என்று வனிதா தெரிவித்துவிட்டு தனக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு சென்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு தனியார் மருத்துவ நிர்வாகம் முறையாக பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து வனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனக்கு பிறந்த குழந்தை இறந்து ஒரு மாதம் ஆகிறது என கண்ணீர் மல்க தெரிவித்தார். தனக்கு நிகழ்ந்ததை போன்று இப்படி ஓர் நிலைமை ஏற்படக் கூடாது தெரிவித்தார்.