பாஜக - காங்கிரஸ் கட்சியினர் இடையே அடிதடி : கலவரமான நாகர்கோவில்

Indian National Congress BJP
By Irumporai Apr 04, 2023 09:57 AM GMT
Report

நாகர்கோவிலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நடந்த மோதலில் 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பாஜக மோதல்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாஜக - காங்கிரஸ் கட்சியினர் இடையே அடிதடி : கலவரமான நாகர்கோவில் | A Case Has Been Registered Against 53 People

  வழக்கு பதிவு

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

  இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவினர் 53பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர், இது வரை 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனங்களை பதிவு செய்துள்ளது