மேடையில் உற்சாகமாக பாடிய பிரபல பாடகி - தொடையை பார்த்து துபாக்கியால் சுட்ட வாலிபர்
கலாச்சார நிகழ்வின் போது மேடையில் பங்கேற்று பாடிக்கொண்டிருந்த பிரபல போஜ்புரி பாடகியான நிஷா உபாத்யாய், துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலமான பாடகி
பீகாரைச் சேர்ந்த பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யாய். சரண்மாவட்டத்தில் உள்ள கவுர் பசந்த் கிராமத்தைச் சேர்ந்தவர்.
பாட்னாவில் வசிக்கும் அவர் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில் சரண் மாவட்டத்தில் உள்ள செந்துவார் கிராமத்தில் உபநயன் விழாவில் பாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு பாடகி நிஷா உபாத்யாய் வந்தார்.
தொடையில் பாய்ந்த குண்டு
வீரேந்திரசிங் என்பவரது வீட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாடகி நிஷா பாடிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் பாடகி நிஷாவின் இடது தொடையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இதனால் அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மூலம் தொடடையில் இருந்த தோட்டாவை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது பாடகி நிஷா நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஜனதா பஜார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நஸ்ருதீன் தெரிவிக்கையில், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.