இது முதல்ல பட்ஜெட்டா? மளிகைக் கடை பில் மாதிரி : சுப்பிரமணிய சுவாமி கிண்டல்

Budget 2023
By Irumporai Feb 01, 2023 12:47 PM GMT
Report

2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

பட்ஜெட் விமர்சனம்

குறிப்பாக விவசாயிகளை பாதுகாக்க எந்த திட்டமும் இல்லை என்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பு இல்லை எனவும் குற்றசாட்டியுள்ளனர்.

இது முதல்ல பட்ஜெட்டா? மளிகைக் கடை பில் மாதிரி : சுப்பிரமணிய சுவாமி கிண்டல் | A Budget Grocers Bill Subramanian Swamy

மளிகை கடை பில் போல

அந்தவகையில், இன்று தாக்கல் செய்யப்பட்டது பட்ஜெட்டா? இது ஒரு மளிகைக் கடைக்காரரின் பில் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.

மாளிகைக் கடைக்காரரின் பில் போல மத்திய பட்ஜெட் உள்ளது. உண்மையான, நேர்மையான குறிக்கோள்கள் குறித்து வெளிப்படுத்துவதே சிறந்த பட்ஜெட் என தெரிவித்துள்ளார்.

மேலும், GDP வளர்ச்சி விகிதம் என்றால் முதலீட்டின் நிலை மற்றும் வருவாய் விகிதத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் முன்னுரிமைகள், பொருளாதார உத்தி மற்றும் வளங்களை திரட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.