திருமணம் செய்யலாம் வா..! மறுத்த காதலியை கொடூரமாக தாக்கிய காதலன்

Madhya Pradesh
By Thahir Dec 26, 2022 02:55 AM GMT
Report

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், 24 வயது இளைஞன், தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறி, 19 வயதுப் பெண்ணை கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலியை கொடூரமாக தாக்கிய காதலன் 

இதயத்தை உலுக்கும் தாக்குதலின் வைரலான வீடியோவால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே ஒரு தகராறு ஏற்பட்டுள்ளது.

A boyfriend who brutally assaulted his girlfriend

அப்பொழுது திடீரென்று அந்த நபர் பெண்ணை அறைந்து, அவளுடைய தலைமுடியைப் பிடித்து, தரையில் தலையில் அறைகிறார்.

இந்த தாக்குதலால் பெண் சுயநினைவின்றி அந்த பெண் பல மணி நேரம் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி பங்கஜ் திரிபாதி மற்றும் வீடியோ பதிவு செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.